உலகம்விளையாட்டு

உலகக்கோப்பை விழாவில் டிரம்பின் ‘போட்டோ பாம்’- வைரலகும் சங்கட தருணம்

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற கோப்பை வழங்கும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நியூஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் தனது இரண்டாவது FIFA உலகக்கோப்பையை கைப்பற்றியது.

போட்டி முடிந்ததும், FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து டிரம்ப் வீரர்களுக்கு பதக்கங்களையும் உலகக்கோப்பையையும் வழங்கினார்.

ஆனால், ஸ்பெயின் அணித்தலைவர் ரோட்ரி கோப்பையை உயர்த்தத் தயாரானபோதும், டிரம்ப் மேடையிலேயே நின்றிருந்தது சங்கடமான தருணத்தை ஏற்படுத்தியது.

தொலைக்காட்சி காட்சிகளில், FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ டிரம்பிடம் பேசிச் சில நொடிகள் கழித்து மேடையிலிருந்து விலகிச் செல்ல வழிநடத்தியது பதிவாகியுள்ளது. அதன் பின்னரே ரோட்ரி உலகக்கோப்பையை உயர்த்தினார்.

Screenshot
Screenshot

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது. பலரும் இதை ஸ்பெயின் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பை உயர்த்தும் தருணத்தில் நிகழ்ந்த “Photobomb” என விமர்சித்தனர். சர்வதேச ஊடகங்களும் இந்த அசாதாரண தருணத்தை தங்களது செய்திகளில் முக்கியமாக வெளியிட்டுள்ளன.

டொனால்ட் டிரம்ப், சிறப்பு விருந்தினராக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கலந்துகொண்டு, FIFA அதிகாரிகள் மற்றும் உலகத் தலைவர்களுடன் இணைந்து பரிசளிப்பு விழாவில் பங்கேற்றிருந்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button