
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இன்று பார்வையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 20ஆம் திகதி அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பது என ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்தாலும், கடந்த 7 ஆம் திகதி இந்த வழக்கு மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நிதிச் செலவினத்துக்கான திட்டத்துக்கு நீதி அமைச்சினால் அனுமதி வழங்கப்படாமை தொடர்பில் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
குறித்த அனுமதி தொடர்பில் ஆராய்வதற்காக, வழக்கு இன்று மீள எடுக்கப்படும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி அகழ்வுப்பணிகளை ஆரம்பிப்பதா? இல்லையா என்பது தொடர்பிலும் இன்று நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





