இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை: 100 மில்லி மீற்றக்கும் அதிகமான மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

 

 

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றக்கு அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழையால் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்துகிறது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button