உலகம்

மியான்மரில் வெடிபொருள் வெடிப்பு – 46 பேர் உயிரிழப்பு

மியான்மர் நாட்டில் சுரங்கப் பணிக்காக கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

நாம்காம் நகரம் அருகேவுள்ள காவுன்டப் கிராமத்தில் உள்ள கட்டடமொன்றில் சுரங்கத்தில் பாறைகளைத் தகர்க்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவை திடீரென நேற்று (31) அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் 6 சிறுவர்கள் உள்பட 46 போ் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 74 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

 

 

 

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

 

 

வெடி விபத்தில் காயமடைந்தோரில் பலரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகின்றது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button