
ஈரானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பான தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனா மறைமுகமாக ஈரானுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
குறிப்பாக, ரேடார்களில் சிக்காமல் பறக்கும் ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் மற்றும் அதிதூர இலக்குகளைக் கண்காணிக்கும் ரேடார் அமைப்புகளை ஈரானுக்கு சீனா வழங்கியதாக நம்பப்படுகின்றது.
இத்தகைய நவீன கருவிகள் மூலம், அமெரிக்காவின் எப்-15 இ ஸ்டிரைக் ஈகிள் போன்ற அதிநவீன போர் விமானங்களை ஈரானால் துல்லியமாகக் கண்காணிக்க முடிந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். என என்பிசி நியூஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.




