உலகம்

ட்ரம்பின் உடல்நிலை பரிசோதனை முடிவுகள் வெளியீடு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதுடன், ஜனாதிபதி மற்றும் தலைமைத் தளபதி பொறுப்புகளை திறம்பட மேற்கொள்ளத் தகுதியானவர் என அவரது தனிப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இதயம், நுரையீரல் மற்றும் நரம்பியல் செயல்பாடுகள் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

 

 

 

அதேவேளை, டிரம்ப்பின் கால்களில் லேசான வீக்கம் மற்றும் கைகளில் இரத்தத் தழும்புகள் காணப்பட்டாலும், அவை கவலைக்கிடமானவை அல்ல என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், உடல் எடையைக் குறைத்தல், உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

 

 

இதற்கிடையில், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.

 

 

 

மேலும், அமெரிக்காவின் தடையை மீறி ஈரான் துறைமுகத்தை நோக்கிச் சென்ற வணிகக் கப்பல் ஒன்றை அமெரிக்கப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button