
எபோலா வைரஸ் பரவல் அபாயத்தை எதிர்கொள்வதற்காக இலங்கையில் ஆரம்ப கட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு இணங்க சுகாதார அமைச்சு ஆயத்தத் திட்டங்களையும் ஒத்திகைகளையும் முன்னெடுத்து வருகின்றதாக ஊடக சந்திபொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எபோலா பரவல் பதிவான ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகள் குறித்து விசேட கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேக நோயாளர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சந்தேக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக IDH வைத்தியசாலை தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





