மலையகம்

ஜனாதிபதிக்கு சவால் விடுத்த ஜீவன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்குள், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் மாத்திரம் தனியாக சென்று, மக்களின் வாழ்வியலை ஜனாதிபதியால் அவதானிக்க முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதனை தாம் ஜனாதிபதிக்கான சவாலாக முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நுவரெலியா கொட்டகலையில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, ஜீவன் தொண்டமான் இந்த சவாலை விடுத்துள்ளார்

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை பகிரங்கப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

 

பெருந்தோட்ட நிறுவனங்களுடனான வேதன அதிகரிப்புக்குரிய உடன்படிக்கை பகிரங்கப்படுத்தப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button