உலகம்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பலி

ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் நேற்று (21) நள்ளிரவில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பெருமளவிலானோர் கொல்லப்பட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

 

பாகிஸ்தானில் சமீபகாலமாக அதிகரித்து வரும் தற்கொலை குண்டுவெடிப்புகளுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்லாமாபாத் தெரிவித்துள்ளது

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பதுங்கியிருக்கும் பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்தே இந்த “புலனாய்வு அடிப்படையிலான” நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

 

நாட்டின் இறையாண்மையை மீறிய இந்தச் செயலுக்குப் பொருத்தமான நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என தலிபான் எச்சரித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button