உலகம்சர்வதேசம்

அமெரிக்க குடியேற்ற விண்ணப்பங்களில் கடுமையான மாற்றங்கள் ; உடனடியாக அமுல்

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் விதத்தில் புதிய கடுமையான மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

போதிய சான்றுகளோ அல்லது தேவையான ஆவணங்களோ இல்லாமல் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக நிராகரிக்க அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் அல்லது ஆவணக் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்க 12 வாரங்கள் (3 மாதங்கள்) கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.

இனி அந்த அவகாசம் கிடையாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. புதிதாக தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமின்றி, ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

முழுமையற்ற விண்ணப்பங்களை தாக்கல் செய்து, அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி பணி அனுமதி உள்ளிட்ட சலுகைகளை முறையற்ற வழிகளில் சிலர் பெற்று வருவதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button