விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வருகை

டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற இந்தியா-பாகிஸ்தான போட்டியைக் காண ஏராளமான தனியார் ஜெட் விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன.

சுமார் 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வந்துள்ளன. இந்த ஜெட் விமானங்களின் வருகையால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.

அத்துடன் விமான டிக்கெட்டுகளின் சராசரி விலை சுமார் 500 வீதமாக அதிகரித்துள்ளது, அதாவது, வழமையாக 16,000 ரூபா விலையில் இருக்கும் டிக்கெட் 1,10,000 ரூபாவாகஅதிகரித்துள்ளது.

இந்நிலையில் வருகை தந்த ஜெட் விமானங்களில் 80 வீதத்திற்கும் அதிகமானவை இந்திய பொலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர்களின் விமானங்கள் ஆகும்.

இதேவேளை கொழும்பில் உள்ள முக்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் அறை முன்பதிவுகள் கடந்த சனிக்கிழமை இரவு 100 வீதத்தை எட்டியுள்ளது.

பொருளாதார ரீதியாக மீண்டு வரும் இலங்கைக்கு, இந்த கிரிக்கெட் போட்டி உலகளாவிய கவனத்தையும் நிதி சார் பலத்தையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button