விளையாட்டு

சூர்யகுமார் யாதவின் அணியில் இத்தனை மாற்றங்களா? – ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திய பிசிசிஐ

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணம் மற்றும் அதற்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று ( 20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஜனவரி இறுதியில் நியூசிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது.

2026 பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசித் தொடர் இதுவாகும்.

அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் இடம்பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

நீண்ட நாட்களாக தனது திறமையை வெளியப்படுத்தாத சில வீரர்களை நீக்கிவிட்டு, அதிரடியான முடிவுகளைத் தேர்வுக்குழு எடுக்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

மும்பையிலுள்ள பிசிசிஐ தலைமையகத்தில் இன்று பிற்பகல் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button