சுவிஸ்

கிரான்ஸ்-மொந்தானா: தீ விபத்துக்குப் பின் வெறிச்சோடும் ஹோட்டல்கள்

வலே மாநிலத்தில் (Valais) உள்ள சுற்றுலா நகரம் கிரான்ஸ்-மொந்தானாவில் (Crans-Montana) ஹோட்டல்களில் தங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 தீ விபத்துக்குப் பிறகு இந்த நிலை தொடர்கிறது.

அன்று “கொன்ஸ்டெலேஷன்” (Le Constellation) பாரில் தீப்பிடித்தது. அந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இப்போது ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஹோட்டல்களில் தங்கியவர்கள், கடந்த ஆண்டை விடக் கணிசமாகக் குறைவு.

சில ஹோட்டல்கள் புதுப்பிப்புப் பணிக்காக ஓரளவு மூடப்பட்டிருந்தன. அதையும் கணக்கில் எடுத்தால், சரிவு கிட்டத்தட்ட 6-ல் ஒரு பங்கு. சுற்றுலா அலுவலக இயக்குநர் புருனோ ஹக்லர் (Bruno Huggler) இதை “ஜனவரி 1-ன் தாக்கம்” என்கிறார். மத்திய கிழக்கு மோதல்களும் ஒரு காரணம் என்கிறார். சுவிஸ் மக்களை விட வெளிநாட்டுப் பயணிகள் அதிகமாகக் குறைந்துள்ளனர்.

மற்ற பெரிய சுற்றுலா நகரங்களின் நிலை வேறு. ஃபெர்பியே (Verbier), செர்மாட் (Zermatt), டாவோஸ் (Davos) ஆகியவற்றில் கூட்டம் பழைய அளவிலேயே உள்ளது. ஸ்டாட் (Gstaad), செயின்ட் மொரிட்ஸ் (Saint-Moritz) ஆகியவற்றில் பயணிகள் அதிகரித்துள்ளனர்.

உணவகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. யுகி பார் (Yuki bar and lounge) முன்னாள் இயக்குநர் அலெக்சிஸ் நிக்கோலா (Alexis Nicolas) வருமானம் பெருமளவு குறைந்ததாகச் சொல்கிறார். அந்தக் கடை மே மாதம் மூடப்பட்டது. அதை எடுத்து நடத்த இன்னும் யாரும் வரவில்லை.


மூலம்: Le Matin
புகைப்படம்: Patrick Robert Doyle / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button