அப்பென்செல் இன்னர்ரோடன் மாநிலத்தில் (Appenzell Innerrhoden) உள்ள ஒபரெக் (Oberegg) பகுதியில் நவம்பர் 7-ம் தேதி மூன்று லிங்க்ஸ் காட்டுப் பூனைகள் இறந்து கிடந்தன. அவை வேறு இடத்தில் கொல்லப்பட்டு, இங்கே கொண்டு வந்து போடப்பட்டவை என்று போலீஸ் இப்போது கூறியுள்ளது.
இறந்தவை ஒரு தாய்ப் பூனையும் அதன் இரண்டு குட்டிகளும். லிங்க்ஸ் சுவிஸில் பாதுகாக்கப்பட்ட காட்டு விலங்கு. அதைக் கொல்வது சட்டப்படி குற்றம்.
மாநில போலீஸ் திங்கட்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டது. நவம்பர் 4 (புதன்) முதல் நவம்பர் 7 (சனி) வரையிலான நாட்களுக்குள் அவை கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் நினைக்கிறது. பிறகு உடல்கள் ஒபரே பொய்மென் (Obere Bäumen) என்ற பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
இவை எப்படி இறந்தன என்பதை போலீஸ் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளது. இதைப் பற்றி ஏதாவது தெரிந்தவர்கள் 071 788 95 00 என்ற எண்ணில் போலீஸைத் தொடர்பு கொள்ளலாம்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Eirik Olsen / Unsplash





