சுவிஸ் பொருளாதாரம் 2026-ன் மூன்றாவது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) சிறிதளவு வளர்ந்துள்ளது. தொழில்துறைதான் இந்த வளர்ச்சியை முன்னே இழுத்துச் சென்றது.
ஆனால் வளர்ச்சியின் வேகம் குறைந்துவிட்டது. இரண்டாவது காலாண்டில் சுவிஸ் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தது. அப்போது வளர்ச்சி கிட்டத்தட்ட ஒன்றரை சதவீதம். இந்த முறை அந்த அளவுக்கு இல்லை.
பல பொருளாதார நிபுணர்கள் இந்த முறை பொருளாதாரம் சற்றுச் சுருங்கும் என்று நினைத்தனர். AWP என்ற செய்தி நிறுவனம் நடத்திய கணிப்பிலும், சராசரியாக “வளர்ச்சியும் இல்லை, சரிவும் இல்லை” என்றே சொல்லியிருந்தனர். ஆனால் உண்மை நிலை அதைவிட சற்று நல்லதாக வந்துள்ளது.
இந்தக் கணக்கை சுவிஸ் அரசின் பொருளாதார அலுவலகம் (Seco) வெளியிட்டது. இது முழுக் கணக்கு இல்லை, ஒரு விரைவு மதிப்பீடுதான். சில தகவல்கள் இன்னும் வரவில்லை. அதனால் அவற்றுக்குப் பதிலாகக் கணிப்பு மதிப்புகளைச் சேர்த்துள்ளனர். எனவே பின்னர் எண்ணிக்கை கொஞ்சம் மாறலாம். விரிவான மதிப்பீடு நவம்பர் 30 அன்று வெளிவரும்.
மூலம்: SRF
புகைப்படம்: Yura Lytkin / Unsplash





