தமிழீழம்

யாழில் வடமாகாண ஐயப்ப இந்து மாநாடு

வடமாகாண ஐயப்ப இந்துமாநாடு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

இம்மாநாட்டில் , அதிதிகளாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , இந்தியா துணைத்தூதுவர் சாய் முரளி, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நாடளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இந்து சமயத்தின் ஆன்மீக விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்தல், பக்தி நெறியை வளர்த்தல், சமயப் பாரம்பரியங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்தல் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் சமயப் பெரியோர்கள், ஐயப்ப குருசுவாமிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button