இந்தியாஇலங்கை

அர்னாப் புயல் தாக்கம் – இலங்கையின் 25 படகுகளுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை திரும்ப முடியாமல் இந்தியாவை அண்மித்த கடல் பகுதியில் தங்கியுள்ள நாட்டின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள், நிலவும் ஆபத்தான நிலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியப் பிராந்தியக் கடலுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைவாகவே இந்த அனுமதி கிடைத்துள்ளது.

 

வங்காள விரிகுடாக் கடற்பகுதியில் தீவிரமடைந்துள்ள ‘அர்னாப்’ புயல் நிலைமை காரணமாக, இந்தியாவை அண்மித்த கடல் பகுதியில் தொடர்ந்து தங்கியுள்ள பலநாள் மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்வள அமைச்சு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாதிப்புக்குள்ளான கடல் பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் அந்தப் படகுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, குறித்த கடல் பகுதியில் தங்கியுள்ள அனைத்துப் படகுகளின் உரிமையாளர்களுக்கும் நிலவும் சூழ்நிலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய சரியான நடைமுறைகள் குறித்து மீன்பிடி, நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

முன்னேடுக்கப்படவுள்ள வானிலை எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்வள அமைச்சு முழு மீன்பிடி சமூகத்திடமும் மேலும் கோரப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button