சுவிஸ்

ஐ.நா. தரவரிசையில் உலகின் புதுமையான நாடாக சுவிட்சர்லாந்து மீண்டும் முதலிடம்

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அறிக்கையின்படி, உலகின் மிகவும் புதுமையான நாடு என்ற முதலிடத்தை சுவிட்சர்லாந்து மீண்டும் தக்கவைத்துள்ளது.

சுவிட்சர்லாந்து தொடர்ந்து 16 ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் வெளியிட்ட உலக புதுமைச் சுட்டெண் (Global Innovation Index)தரவரிசையில், சுவிட்சர்லாந்துக்கு அடுத்தபடியாக ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே, சீனா இந்த ஆண்டும் 10ஆவது இடத்தில் உள்ளது.

ஆராய்ச்சி முதலீடு அதிகரிப்பு

2025ஆம் ஆண்டில் ஆராய்ச்சிக்கான உண்மையான செலவினம் 3.3% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அது மேலும் சிறிதளவு அதிகரித்து, 3,400 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினம் 5.8% அதிகரித்து, 1,500 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. இது இதுவரை பதிவான புதிய சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI முதலீட்டில் முன்னிலை

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான துணிகர முதலீடு (Venture Capital) சுமார் 30% அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான மிகப்பெரிய அதிகரிப்பு இதுவாகும்.

இந்த முதலீட்டில் மொத்தம் 53% செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்கு சென்றுள்ளது.

WIPO தலைமை இயக்குநர் டேரன் டாங் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு “அனைத்து அறிவியல் துறைகளிலும்”புதிய தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

Bundespraesident Guy Parmelin spricht im Nationalrat an der Herbstsession der Eidgenoessischen Raete, am Donnerstag, 24. September 2026 in Bern. (KEYSTONE/Peter Schneider)

இதன் மூலம், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் துணிகர முதலீடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button