சுவிஸ்

சூரிச் விமான நிலையத்தில் ஒரே நாளில் பயணிகள் எண்ணிக்கையில் புதிய சாதனை

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் ஒரே நாளில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் வழியாக 1,23,000-க்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கை என்ற புதிய சாதனை உருவாகியுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் AWP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

எனினும், இது தற்போது கிடைத்துள்ள தற்காலிக புள்ளிவிவரம் மட்டுமே எனவும், இறுதி எண்ணிக்கை நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல காண்டன்களில் இலையுதிர் கால விடுமுறை ஏற்கனவே தொடங்கியிருந்ததும், மேலும் சில காண்டன்களில் இந்த வார இறுதியில் விடுமுறை ஆரம்பித்திருந்ததுமே பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வழக்கத்தை விட அதிகமானோர் விடுமுறைக்காகப் பயணம் மேற்கொண்டதுடன், விடுமுறையை முடித்துவிட்டு சுவிட்சர்லாந்துக்குத் திரும்பியுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button