தமிழீழம்

செம்மணி புதைகுழி வழக்கு: எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (30) யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவிருந்த அறிக்கைகளுக்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த அறிக்கைகளை எதிர்பார்த்து வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.

அதேவேளை, பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் ஊடாக குறித்த அறிக்கையை ஒக்டோபர் 15ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளார்.

இதன்படி, செம்மணி புதைகுழி வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 19ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button