சுவிஸ்

சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வீட்டு விலைகள்!

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டிலும் வீடுகள் மற்றும் சொத்துகளின் விலைகள் தொடர்ந்து உயர்ந்துள்ளன. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் விலைகள் சராசரியாக 0.8% அதிகரித்துள்ளதுடன், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3.3% உயர்ந்துள்ளதாக, புதன்கிழமை வெளியிடப்பட்ட CIFI தனியார் சொத்து விலைக் குறியீடு தெரிவிக்கிறது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், சொந்தமாகக் குடியிருப்பதற்கான அடுக்குமாடி வீடுகளின் விலைகள் 0.8% அதிகரித்துள்ளன. தனி வீடுகளின் விலைகள் 0.7% உயர்ந்துள்ளன.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், அடுக்குமாடி வீடுகளின் விலைகள் 2.8% அதிகரித்துள்ளதுடன், தனி வீடுகளின் விலைகள் 3.9% உயர்ந்துள்ளன.

இதன் விளைவாக, சொத்து கொள்வனவு மற்றும் விற்பனைப் பரிவர்த்தனைகள் குறைந்துள்ளன. இதனால் அடமானக் கடன் வழங்கப்படும் அளவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடன் பெறுவதற்கான சாதகமான சூழல் நிலவினாலும், பல குடும்பங்களால் சொந்தமாக வீடு வாங்குவது இன்னமும் கடினமாக இருப்பதாகச் சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் Swiss Marketplace Group நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

முதலீட்டுச் சொத்துகளுக்கு அதிக கேள்வி

மறுபுறம், முதலீட்டு நோக்கிலான சொத்துகளுக்கு தொடர்ந்து அதிக கேள்வி நிலவுகிறது. குறிப்பாக, பல குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடங்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான இடங்களையும் உள்ளடக்கிய கலப்புப் பயன்பாட்டுக் கட்டடங்கள் முதலீட்டாளர்களைக் கவர்கின்றன.

இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், முதலீட்டுச் சொத்துகளின் விலைகள் 1.4% அதிகரித்துள்ள நிலையிலும், அவற்றுக்கான கேள்வி வலுவாகத் தொடர்கிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button