உலகம்

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்; ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டெக்சாஸ் செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஈரானால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தேர்தலுக்குப் பிறகு உடனடியாக போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கிறேன் என்று ட்ரம்ப் கூறினார்.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி தனது சொந்த குடியரசுக் கட்சிக்குள்ளிருந்தே அழுத்தத்தை எதிர்நோக்கி வருவதுடன் அவருக்கான கருத்துக் கணிப்பு ஆதரவும் குறைந்து வருகின்றது.

பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து, இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பது குறித்து ட்ரம்ப் பல்வேறு காலக்கெடுவை முன்பு அளித்திருந்தார்.

ஆனால், போர் தொடர்ந்தும் நீடித்து வருவதால் ட்ரம்ப் மீது பல்வேறு விமர்சனங்கள் நேரடியாகவே எழுந்துள்ளன. மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள மோதல்கள் காரணமாக, நேற்றைய தினம் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலரை கடந்து விற்பனையாகின்றது.

இது கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஏற்பட்ட பாரிய அதிகரிப்பாகும்.

ஈரான் போர் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க நேரப்படி இன்றைய தினம் குடியரசுக் கட்சி மாநாட்டில் ட்ரம்ப் சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button