தொழில்நுட்பம்

2030-க்குள் மனிதகுலம் அழியப்போகிறதா? AI நிறுவன ஆய்வாளரின் பகீர் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஜேகப் காக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Anthropic மற்றும் OpenAI உள்ளிட்ட முன்னணி AI நிறுவனங்கள், போதிய கட்டுப்பாடுகள் இன்றி அதிக திறன் கொண்ட Superintelligence தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் போட்டியிட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எதையும் ஹேக் செய்யும் திறன் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் அளவிலான அதிகாரம் கொண்ட AI அமைப்புகளின் வளர்ச்சியை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆபத்தான போட்டி தொடருமானால், எதிர்காலத்தில் அதன் விளைவுகள் மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும் எனவும் ஜேகப் காக்சன் எச்சரித்துள்ளார்.

மேலும், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2030-க்குள் மனிதகுலமே அழியும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்போது AI பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

எனினும், 2030-க்குள் மனிதகுலம் அழியும் என்ற கூற்று உறுதியான அறிவியல் கணிப்பு எனக் கருதப்பட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button