ஜோதிடம்

இன்றைய (28.08.2026) ராசிபலன்

மேஷம் : சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத் தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம் : பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத் தினரிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். உடல் அசதி, தூக்கமின்மை நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்டநாட்களாக எதிர் பார்த்த தொகை கைக்கு வரும். தாயார் ஆதரவாக இருப்பார்.

மிதுனம் : விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் இருந்துவந்த வீண் விவாதங்கள் நீங்கும். வெளியூர் பயணம் அலைச் சலைத் தந்தாலும் நன்மை உண்டு. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

கடகம் : குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

சிம்மம் : கடனைத் தீர்க்க புதிய வழிகளை யோசிப்பீர்கள். வேலைதேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக் கும். தாயாரின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வெளியூர் பயணம் உண்டு.

கன்னி : பிரபலங்கள் சிலரைச் சந்திப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வரக்கூடும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

துலாம் : குடும்பத்தில் குழப்பம் நீங்கி குதூகலம் காணப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி, மதத்தி னரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகை உண்டு.

விருச்சிகம் : பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வியா பாரத்தால் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். மனைவிவழி உறவினர்கள் உங்கள் ஆதரவை நாடுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

தனுசு : புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். விலகி இருந்த சொந்த பந்தங்கள் மீண்டும் வருவார்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.

மகரம் : குடும்பத்தாரின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்திசெய்வீர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். அக்கம்பக்கத் தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு அதிகரிக்கும்.

கும்பம் : எந்த வேலையைத் தொட்டாலும் இழுபறிக்குப் பின்னரே முடிவடையும். குடும்பத்தினரிடையே கருத்துவேறுபாடுகள் தலை தூக்கும். வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை வெளி நபரிடம் பகிர வேண்டாம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

மீனம் : மனதில் நிலவிய குழப்பங்கள் விலகும். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும். சகோதரர் வகையில் சுபச்செலவு உண்டு. மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button