
மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு, அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இழுபறியாக உள்ள விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு.
ரிஷபம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பல வகையிலும் பண வரவு கூடும். பொருட்கள் சேரும்.
மிதுனம்: தேவையற்ற சந்தேகத்தால் மன வருத்தம், குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். கோபத்துக்கு இடம்தராமல் பொறுமையாக இருங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
கடகம்: பழைய பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பணவரவு உண்டு. கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.
சிம்மம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். எக்காரியத்திலும் பொறுமை அவசியம்.
கன்னி: வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பிறக்கும். வயிற்றுவலி, கழுத்துவலி குணமாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள்.
துலாம்: வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தம்பதியர் இடையே மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும்.
விருச்சிகம்: இங்கிதமாக, சாதுர்யமாகப் பேசி, கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதால், ஊழியர்கள் உற்சாகம் அடைவார்கள்.
தனுசு: தேவையற்ற அச்சம், கவலைகள் நீங்கி, நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பேச்சில் தெளிவு பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பெற்றோரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பண வரவு உண்டு.
மகரம்: உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் ஒத்தாசையாக இருப்பார்கள். சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பழுதான வாகனத்தை மாற்றி புதிதாக வாங்குவீர்கள்.
கும்பம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தைரியமாக செயல்பட்டு, முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சந்திப்பு நிகழும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவீர்கள்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். அலுவலகத்தில் பரிசு, பாராட்டு கிடைக்கும். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் கூடும்.


