சுவிஸ்

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானவர்கள் சுவிட்சர்லாந்தில் தங்க நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தில் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்த தாய் மற்றும் மகள், நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கு நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளனர்.

இருவரும் தங்களது சுவிஸ் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்த மாகாண குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தீர்மானத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தனர்.

அந்த மேல்முறையீட்டை விசாரித்த Aargau நிர்வாக நீதிமன்றம், முந்தைய தீர்மானத்தை ரத்து செய்து தாய்–மகள் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம், அவர்கள் சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க (EFTA) நாடுகளுக்கான குடியிருப்பு அனுமதியைத் தொடர்ந்து வைத்திருக்க முடியும். எனினும், இந்தத் தீர்ப்பு இன்னும் இறுதியானதாக இல்லை.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், தாய் முன்னாள் அரசியல்வாதியிடம் வீட்டு பணியாளராக சட்டபூர்வமான வேலை உறவில்இணைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பின்னர் இருவருக்கும் தனிப்பட்ட உறவு உருவானாலும், அதனை பொய்யான வேலை ஒப்பந்தம் (sham employment) என வகைப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button