
பேர்ண்: சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழ்ப் பின்னணியைக் கொண்ட 32 வயதான அனோஜன் கனகசிங்கம், சுவிஸ் கால்பந்து வரலாற்றில் உயர்தர நடுவராக (Top-Tier Referee) களமிறங்கிய முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
சமீபத்தில் பாசல் நகரில் நடைபெற்ற பார்சிலோனா (FC Barcelona) மற்றும் பாசல் (FC Basel) அணிகளுக்கு இடையிலான சிறப்புப் போட்டியில் பிரதான நடுவராகக் கடமையாற்றி, உலகளவில் தமிழ் சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பிறப்பும் பின்னணியும்: சுவிற்சர்லாந்தின் பேர்ன் (Bern) மாநிலத்தில் ஈழத்தமிழ்ப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் அனோஜன்.
திருப்புமுனை சம்பவம்: தனது 17-வது வயதில் உள்ளூர் கழகம் ஒன்றிற்காக கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, போட்டியில் நடுவர் செய்த தவறான தீர்ப்பைக் கண்டு, “தானும் ஒரு நேர்மையான நடுவராக வர வேண்டும்” என்ற இலட்சியத்துடன் நடுவர் பயிற்சியைத் தொடங்கினார்.
உயர் பதவி உயர்வு: சுவிட்சர்லாந்தின் முன்னணி நடுவரான லியோனல் சுடி (Lionel Tschudi) ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, சுவிஸ் கால்பந்து சம்மேளனம் அனோஜனை உயர்தர நடுவர் பதவிக்கு நியமித்தது.
சர்வதேச அரங்கில் ஈழத் தமிழரின் சாதனை:
தற்போது சுவிட்சர்லாந்தின் ‘சூப்பர் லீக்’ (Super League) தொடரின் பல முக்கிய போட்டிகளில் நடுவராகச் செயல்பட்டு வரும் அனோஜன், உலகப் புகழ்பெற்ற பார்சிலோனா அணி பங்கேற்ற போட்டியிலும் நடுவராகப் பணியாற்றி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
ஐரோப்பிய கால்பந்து அரங்கில் இவர் எட்டியுள்ள இந்த உயரம், சுவிஸ் வாழ் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பெரும் உத்வேகத்தையும் பெருமையையும் அளித்துள்ளது.
எமது அடுத்த தலைமுறை தேசங்கள் கடந்தும் மேலும் பல சிகரங்களை எட்ட உலக தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.





