
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இறையியல் பேராசிரியர் Peter G. Kirchschläger, சமூக மற்றும் சமூக-நெறிமுறை விவகாரங்களில் வத்திக்கானுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ளார்.
போப் Leo XIV, Kirchschläger-ஐ ‘Dicastery for Promoting Integral Human Development’ அமைப்பின் ஆலோசகராக நியமித்துள்ளதாக லூசேர்ன் பல்கலைக்கழகமும் வத்திக்கானும் தெரிவித்துள்ளன.
அமைதியை மேம்படுத்துதல், நீதி, சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் இந்த அமைப்புக்கு மொத்தம் 12 புதிய நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Kirchschläger, University of Lucerne-இன் Institute for Social Ethics அமைப்பின் தலைவராக உள்ளார். மேலும், ETH Zurich பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும், மனிதரல்லாத உயிரித் தொழில்நுட்பம் தொடர்பான Swiss Federal Ethics Committee-இன் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
அத்துடன், லூசேர்ன் நகரின் ‘Smart Lucerne’ Ethics Advisory Board-இன் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.





