
சுவிற்சர்லாந்தில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த வெப்ப அலை தாக்க உள்ளதாக மெட்டியோஸ்விஸ் மற்றும் SRF Meteo எச்சரித்துள்ளன.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் சிறிய மாற்றம் இருக்கும். இடியுடன் கூடிய மழையும் சாரல் மழையும் பெய்ய வாய்ப்புள்ளதால், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த குளிர்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்காது. அடுத்த செவ்வாய்க்கிழமையிலேயே புதிய வெப்ப அலை தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சூரிச் மற்றும் பேசல் நகரங்களில் 31 டிகிரியும், வியாழக்கிழமைக்குள் 33 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.
இதோடு முடிவில்லை. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை எட்டும் அபாயமும் இருப்பதாக தற்போதைய முன்னறிவிப்புகள் கூறுகின்றன.
பகல் மட்டுமல்ல, இரவுகளும் வெப்பமாக மாறவுள்ளன. தற்போது 11 டிகிரி வரை குறையும் இரவு வெப்பநிலை, அடுத்த வாரம் 17 முதல் 20 டிகிரி வரை உயரக்கூடும். எனவே, அதிக தண்ணீர் அருந்துவது, நேரடி வெயிலை தவிர்ப்பது மற்றும் வயதானவர்கள், குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.





