இலங்கை

உரிமையாளரைத் தேடும் சூரிச் காவல்துறை! கின்வில் பகுதியில் மீட்கப்பட்ட 2 அரிய வகை பாம்புகள்.

சுவிஸ் நாட்டின் சூரிச் மாநில கின்வில் பகுதியில் உள்ள ‘வாண்ட்ஹூஸ்லிஸ்ட்ராஸ்’ (Wändhüslistrasse) அருகிலுள்ள “ஸ்ட்ரிடாக்கர்” (Stritacher) திறந்தவெளி மைதானத்தில் இரண்டு அரிய வகை வெளிநாட்டுப் பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட இந்தப் பாம்புகளில் ஒன்று, மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ‘வல்ச்சர் பாம்பு’ (Vulture Snake) என்றும், மற்றொன்று வட அமெரிக்காவைச் சேர்ந்த ‘கார்ன் பாம்பு’ (Corn Snake – சோளப் பாம்பு) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

உரிமையாளருக்குக் காவல்துறை வேண்டுகோள்:
இந்தப் பாம்புகள் யாருக்கேனும் சொந்தமானவையா அல்லது சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டுத் தப்பி வந்தவையா என்பது குறித்து சூரிச் மண்டல காவல்துறை (Zürich Cantonal Police) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது உரிமையாளர் பற்றிய விவரங்கள் கிடைத் தாலோ, பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Screenshot

தொடர்பு எண்: +41 58 648 48 48 (Zürich Cantonal Police)

#Hinwil #SwitzerlandNews #KantonspolizeiZürich #SnakeRescue #VultureSnake #CornSnake #TamilNews #SwitzerlandTamil #PublicSafety #ZurichNews #SwissTamilInfo #SwissTamil #ViduthalaiFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button