
வரலாற்றுச் சிறப்புமிக்க தேவிநுவர உத்த்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் ஆண்டு எசல பெரஹெராவில், கடந்த ஆண்டு பங்கேற்ற அனைத்து 45 காவடி நடனக் குழுக்களும் இந்த ஆண்டும் பங்கேற்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தத் தீர்மானம், இன்று (27) பிற்பகல் மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பெரஹெராவில் இடம்பெறும் காவடி நிகழ்வை இடைநிறுத்துமாறு பொலிஸார் முன்பு பரிந்துரைத்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை (28) நடைபெறவுள்ள பெரஹெராவிற்கான பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மேலதிக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்தவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.





