இலங்கை

மட்டக்களப்பு பன்சேனை பாரி வித்தியாலய மாணவிகள் தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிக்குத் தேர்வு!

 

மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வரலாற்றுச் சாதனை!
கிழக்கு மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்டு மிகச்சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய மட் / மமே / பன்சேனை பாரி வித்தியாலய மாணவிகள் தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

சாதனைகளின் விபரம்:

• 20 வயதிற்குட்பட்ட பிரிவு: முதலாம் இடம் (சாம்பியன்) 🏆

• 17 வயதிற்குட்பட்ட பிரிவு: மூன்றாம் இடம் 🥉

மாகாண மட்டத்தில் திறம்பட விளையாடி, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள சாதனை வீராங்கனைகளுக்கும், அவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்த விளையாட்டுப் பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், வழிகாட்டிய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

தேசிய மட்டப் போட்டியிலும் வெற்றி மகுடம் சூட எமது வாழ்த்துகள்!

#PansenaiPariVidyalayam
#BatticaloaSports #Batticaloa
#EasternProvinceFootball #GirlPower #WomenInSports
#FootballGirls #FutureChampions
#SportsAchievements #ViduthalaiFM
#NationalLevelBound #Champions #SwissTamilInfo #SwissTamil
#உதைபந்தாட்டம் #பாரிவித்தியாலயம்
#மட்டக்களப்பு #விடுதலைFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button