உலகம்சர்வதேசம்

விண்வெளிக்கு செல்லவுள்ள இந்திய வம்சாவளி அனில் மேனன்; 8 மாதகால பயணம்

அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மனியாபோலிஸ் நகரில், இந்திய மற்றும் உக்ரைன் பெற்றோர்களுக்கு பிறந்தவர் அனில் மேனன்(49). மருத்துவம், ராணுவம் மற்றும் மனித விண் வெளிப்பயணம் ஆகியவற்றில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.

அமெரிக்க விமான படையில் பணியாற்றியபோது, ஆபரேஷன் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாசாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது பணியை தொடங்கிய அனில் மேனன், சர்வதேச விண்வௌி நிலையத்தில் பணியாற்றும் விண்வௌி வீரர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார்.

அனில் மேனனின் மனைவி அன்னா வில்ஹெல்மும் ஒரு விண்வௌி வீராங்கனை ஆவார். இந்நிலையில், அனில் மேனன் வரும் 14 ஆம் திகதி தனது முதல் சர்வதேச விண்வெளி பயணத்தை தொடங்க உள்ளார்.

ரஷ்ய விண்வௌி வீரர்களான பியோத்தர் டுப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன் கஜகஸ்தானில் உள்ள பைக்னோனூர் விண்வௌி ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம்எஸ்-9 விண்கலத்தில் பயணம் மேற்கொள்ள அனில் மேனன் தயாராகி வருகிறார்.

8 மாதகாலம் விண்வௌி நிலையத்தில் தங்கவுள்ள அனில் மேனன், நீண்டகால விண்வௌி பயணத்தால் ஏற்படும் உடலியல் பாதிப்புகள், விண்வௌியில் மனித ரத்த ஓட்டம், திசுக்கள் வளர்ச்சி உள்பட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button