
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதனது வலைத்தளத்தில் எச்சரிக்கை பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில் குறிப்பிடுகையில்,
ஈரான் அரசு உலகின் பல பகுதிகளில் வெளிப்படையாக கூறப்பட்டுள்ள அச்சுறுத்தலின்படி, அமெரிக்காவின் பதவியில் இருக்கும் ஜனாதிபதியான என்னைக் கொலை செய்யவோ அல்லது அதற்கு முயற்சி செய்யவோ செயல்பட்டால், உடனடியாக ஆயிரக்கணக்கான கூடுதல் ஏவுகணைகளும் தொடர்ந்து ஏவப்படும். 1000 ஏவுகணைகள் ஏவத் தயாராக (Locked and Loaded) ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கி குறிவைக்கப்பட்டுள்ளன.
உத்தரவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. மேலும், அமெரிக்க இராணுவம் ஒரு ஆண்டு காலத்திற்கு (தேவையெனில் அதன் காலம் நீட்டிக்கப்படலாம்) முழுமையாக ஈரானின் அனைத்து பகுதிகளையும் கடுமையாகத் தாக்கி அழிக்கத் தயாராகவும், விருப்பத்துடனும், திறனுடனும் உள்ளது. அல்லாஹ்வுக்கே புகழ்! – ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப்” என பதிவிட்டுள்ளார்.







