உலகம்

ஹோர்மூஸ் நீரிணையை மூடினால், நாடே இருக்காது – ட்ரம்ப் எச்சரிக்கை

ஹோர்மூஸ் நீரிணையை மூடினால் ஈரான் என்ற நாடே இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

 

 

 

இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என ஈரான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

மேலும், இந்த வழித்தடத்தில் ஏதேனும் முற்றுகையோ அல்லது இடையூரோ ஏற்படுத்தப்பட்டால், அமெரிக்கா தனது முழு பலத்துடன் கடுமையான பதிலடி கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

இந்நிலையில் உலகளாவிய கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க அமெரிக்கா நேரடியாகக் கட்டுப்பாட்டை ஏற்கக்கூடும் எனவும், அங்கு செல்லும் எண்ணெய் சரக்குகளுக்குக் கட்டணம் விதிக்கவோ அல்லது தேவைப்பட்டால் அந்த நீரிணையைக் கைப்பற்றவோ தயங்காது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button