
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த அடுத்தடுத்த இரட்டை குண்டுவெடிப்புகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும்,பண்ணு மாவட்டத்தில் உள்ள மார்க்கா பெரா பகுதியில், பண்ணு நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் வேனைக் குறிவைத்து பாதையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இந்தத் தாக்குதலில் வேனில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அத்துடன்,மீட்புப் பணியாளர்களைக் குறிவைத்த 2ஆவது குண்டு:
முதல் குண்டுவெடிப்பு நடந்த சில நிமிடங்களில், அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களைக் குறிவைத்து இரண்டாவது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்தத் தொடர் தாக்குதலில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





