இலங்கை

சுவிஸ் குறும்பட விழா: சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார் திவித் முகிலரசன்!

 

சுவிஸ் மண்ணில் இளம் தலைமுறையினரின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘Plan b First Take’ குறும்பட விழா, இம்முறை 2-வது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவிற்காக, ஐரோப்பா மற்றும் சுவிஸ், இந்தியாவில் இருந்து 45-க்கும் மேற்பட்ட தமிழ் குறும்படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அவற்றில் கடும் போட்டிக்கு மத்தியில் 15 படங்கள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவின் பிரபல முன்னணி இயக்குநர் ஒருவரால் இந்த 15 படங்களில் இருந்து சிறந்த படைப்புகள் இறுதித் தெரிவு செய்யப்பட்டன.

இளம் கலைஞர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

தட்டிச் சென்ற திவித் முகிலரசன்!
இதில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையிடப்பட்ட ‘வெருலீ’ மற்றும் ‘பிளாக்‌ஷீப்’ ஆகிய குறும்படங்களுக்கு இசையமைத்த திவித் முகிலரசன் (Divith Mugilarasan), தனது சிறந்த இசைப் பணிக்காக ‘சிறந்த இசையமைப்பாளர்’ (Best Music Director) விருதைத் தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளார். இவர் தாயக இசையமைப்பாளர் சுகுமார் முகிலரசன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் மண்ணில் இளம் தமிழ் திரைக் கலைஞர்களை அடையாளப்படுத்தும் இந்த விழா, சுவிஸ் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot

#DivithMugilarasan #BestMusic Director #TamilShortFilm #SwissTamil Cinema #SwissTamilInfo #TamilCinemaNews #ShortFilmFestival #IndependentArtists #TamilMusic #KollywoodUpdates #Vervuli #BlacksheepShortFilm #TamilYouthTalent #SwissTamils #GlobalTamilTalent #TrendingNewsTamil
#TamilNews #Tamilshortfilm #TamilCinemaNewsLatest #SwissTamilInfo #TamilYouths #TamilNextGeneration

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button