இலங்கைமலையகம்

60 ஆண்டு காலமாக குன்றும் குழியுமாக உள்ள மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதான சாலை.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புரவுன்சீக் தோட்ட லெட்சுமி பிரவு பால் காமம் பிரிவு சின்ன நடுதோட்டம் பிரிவுகளுக்கு செல்லும் பிரதான சாலை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் பாரிய குன்றும் குழியுமாக கடந்த 60 ஆண்டு காலமாக உள்ளது.

மஸ்கெலியா சாமி மலை பிரதான வீதியில் இருந்து புரவுன்சீக் தோட்ட பிரதான பிரிவில் இருந்து இந்த மூன்று பிரிவுகளுக்கு செல்லும் பிரதான சாலையே இவ்வாறு காணப் படுகிறது என அந்த மூன்று பிரிவுகளில் வாழும் சுமார் 900 குடும்பங்களை சேர்ந்த 3250 மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அத் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதியில் தரம் ஒன்று முதல் தரம் 11 வரை உள்ள அரச பாடசாலையான மோட்டிங்ஹேம் தமிழ் வித்தியாலயம் அமைந்துள்ளது அப் பாடசாலையில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் . அங்கு கடமையில் சுமார் 30 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.

இப் படத்திற்கு செல்லும் பிரதான சாலை பாரிய அளவில் குன்றும் குழியுமாக காணப்படுகிறது இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள்,நோயாளர்கள் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவில் பிரசவம் இடம் பெற்று வருகின்றன இதனால் உயிர் இழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் கடுமையான சுகவீனம் உள்ள நோயாளர்களை வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முச்சக்கர வண்டி மற்றும் 1990 அவசர அம்பூலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முன் மரணம் அடைந்து வருகின்றனர் என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப் பகுதியில் இருந்து உயர் தரம் கற்றல் நடவடிக்கைகாக வரும் பாடசாலை மாணவர்கள் தற்போது பெய்து வரும் கனமழையால் தாங்கள் அணிந்து வரும் வெள்ளை ஆடைகளில் மழைநீர் கலந்த சகதி நீர் படுவதால் பாரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

அவசர தேவைக்கு முச்சக்கர வண்டி அல்லது ஏனைய வாகனங்கள் அவ் வீதியூடாக பயணிக்க வாடகைக்கு அமர்த்தி செல்ல கேட்டால் யாருமே அவ் வீதியூடாக பயணிக்க தயார் இல்லை என தெரிவிக்கின்றனர்.அவ்வீதியூடாக தோட்டத்தில் உள்ள உழவு இயந்திரம் மூலமாக தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலை கொழுந்து ஏற்றிச் செல்வதை மட்டுமே காணகூ்கூடியதாகஉள்ளது.

இந்த சாலையை வெள்ளையர்கள் ஆட்சி செய்த காலத்தில் செப்பனிட பட்ட நிலையிலும் அதன் பிறகு வெள்ளையர்கள் தோட்ட நிர்வாகம் செய்த போது செப்பனிட பட்டது மட்டுமே தொடர்ந்து தோட்டங்களை நிர்வகித்து வரும் அரசு பெருந்தோட்ட யாக்கம் அதன் பிறகு கம்பெனிகள் இன்று வரை எவ்வித அடிப்படை வசதிகளும் தோட்ட சாலைகளையும் செப்பனிட படாத நிலையில் உள்ளது.

நில வரியை பெற்றுவரும் பிரதேச சபையோ மாவட்டத்தை நிர்வகிக்கும் அரசாங்க அதிபரோ மாகாண சபை ஆளுநரோ நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ நாட்டின் வீதி அபிவிருத்தி அதிகார சபையோ அல்லது வீதி அபிவிருத்தி அமைச்சரோ பெருந்தோட்ட தொழிலாளர்கள் செறிந்து வாழும் மக்களை கண்டும் காணாத வகையில் உள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள்.

மஸ்கெலியா நிருபர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button