
வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட நாணய கடிதங்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது என நிதியமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது





