இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாகத் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் விழுந்துள்ளார்.

குறித்த சிறுவன் சுமார் 20 முதல் 30 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

பல்வேறு மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களின் தீவிர முயற்சியால் 9 மணி நேர மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் சிறுவன் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button