உலகம்

மத்திய கிழக்கு போர் பதற்றம் : மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி – இயற்கை எரிவாயு திடீர் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றங்கள் நீடித்து வரும் நிலையிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது

எனினும், இயற்கை எரிவாயுவின் விலை இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

 

உலகளாவிய எரிசக்தி சந்தையின் சமீபத்திய தரவுகளின்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 83.85 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.38 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

 

மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அதன் விலை 2.674 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

 

மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவே இந்த விலை ஏற்ற இறக்கங்கள் நிலவுவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button