இலங்கை

இலங்கையின் சேவைத் துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி

கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் இலங்கையின் சேவைத் துறை நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் மாதத்திற்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 59.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

 

மார்ச் மாதத்தில் நிதிச் சேவைத் துறையில் கடன் வழங்கும் நடவடிக்கைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளமை இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும் என மத்திய வங்கி கூறியுள்ளது.

 

நாடு முழுவதும் பொதுவான வணிகக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் செயல்பாடுகள் மார்ச் மாதத்தில் உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button