
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், பரமக்குடியில் நெசவாளர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கைத்தறி நெசவு செய்தவாறு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக நேற்று இரவு அவர் பரமக்குடிக்கு வருகை தந்திருந்தார்.
இன்று காலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட முதல்வர், பரமக்குடி திமுக வேட்பாளர் கே.கே. கதிரவனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தா
பிரசாரத்தின் ஒரு கட்டமாக பரமக்குடியிலுள்ள நெசவாளர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற முதல்வர், அங்குள்ள குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.
அத்துடன், நெசவாளருடன் அமர்ந்து சேலை தயாரிக்கும் முறைகளைக் கேட்டறிந்ததுடன், தானும் கைத்தறியில் நெசவு செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதன்போது நெசவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தெளிச்சாத்தநல்லூர், காட்டுப் பரமக்குடி, ஓட்டப்பாலம் வழியாக வாகனப் பிரசாரத்தை முன்னெடுத்த முதல்வர் ஸ்டாலின், ஐந்து முனைச் சந்தியில் இடம்பெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன





