இந்தியா

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் – பிரதமர் மோடி கோவைக்கு விஜயம்

தமிழகத்தின் கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

 

இந்த கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

இந்த பொதுக்கூட்டத்திற்காக பா.ஜ.க சார்பில் இன்று பூமி பூஜை நடைபெற்றுள்ளது.

 

இதனிடையே நாளை பாஜக செயல்வீரர்களுடன், வாக்குச்சாவடி தொடர்பாக பிரதமர் கலந்துரையாடவுள்ளதாகவும் இந்திய செய்திகள்

தெரிவிக்கின்றன.

 

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருப்பதாவது, “திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பிஜேபி செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

 

ஏப்ரல் 13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button