விளையாட்டு

தென்னாப்பிரிக்க அணிக்கு 177 வெற்றியிலக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான ‘சூப்பர் 8’ சுற்றின் 47-வது லீக் ஆட்டத்தில் இன்று (26) தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமானது.

 

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

 

இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

 

இந்நிலையில் 177 என்ற வெற்றியிலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி துடுப்பாடவுள்ளது.

 

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிடும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button