
தாம் இந்தியாவை எதிர்க்கவில்லை எனவும் ராஜீவ் காந்தி அரசாங்கத்தையே தாம் எதிர்த்ததாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ட்ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதான எதிர்ப்பு இந்தியாவிற்கு எதிரானது அல்ல, மாறாக அப்போதைய ராஜீவ் காந்தி மற்றும் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கங்களுக்கு எதிரானதாகும்.
நாம் அந்த அரசாங்கங்கள் பின்பற்றிய அரசியல் கொள்கைகளையே எதிர்த்தோம். மாறாக எமது எதிர்ப்பு இந்தியாவிற்கோ அல்லது இந்திய விரிவாக்கவாதத்திற்கோ எதிரானது அல்ல.
அதேவேளை கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய சூழலை விட தற்போது உலகம் மாறிவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்





