இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளன.

 

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் காவல்துறை மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும், போக்குவரத்து வசதிகள் குன்றிய பகுதிகளிலுள்ள மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

 

டிட்வா சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட கட்டாய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்காக விசேட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அடையாள அட்டையை இழந்த மாணவர்கள், கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

 

பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபரிடமும், தனியார் விண்ணப்பதாரிகள் கிராம சேவகரிடமும் அந்தப் புகைப்படங்களில் கையொப்பம் பெற்று சான்றுப்படுத்த வேண்டும்.

 

சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்து மூன்று மாதங்களுக்குள் அதன் பெறுபேறுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இதன்போது அறிவித்தார்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button