இலங்கை

e-Locker’ போதும் : NIC அட்டை தேவையில்லை – இலங்கையின் புதிய திட்டம்!

இலங்கையின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பின் (DPI) ஒரு முக்கிய அங்கமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SLUDI) திட்டத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 

இந்தத் திட்டத்திற்காக இன்போசிஸ் (Infosys), டிசிஎஸ் (TCS), புரோட்டியன் (Protean), ரெயில்டெல் (RailTel) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) ஆகிய ஐந்து இந்திய நிறுவனங்கள் முன் தகுதி பெற்றுள்ளன.

 

 

 

இதன்படி முதன்மை அமைப்பை ஒருங்கிணைக்கும் (Master Systems Integrator – MSI) நிறுவனத்தை இந்திய அரசாங்கம் தேர்வு செய்து வருகிறது.

 

அதேவேளை, உள்நாட்டு பராமரிப்பு சேவை வழங்குநரை (Managed Service Provider – MSP) இலங்கை அரசாங்கம் இன்னும் தேர்வு செய்யவில்லை.

 

இதற்கமைய முதல் டிஜிட்டல் அடையாள அட்டை 2026-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தத் திட்டம் MOSIP (Modular Open-Source Identity Platform) எனும் திறந்தநிலை மென்பொருள் தளத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

இது செலவைக் குறைப்பதோடு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கும்.

 

மக்கள் தங்களது டிஜிட்டல் அடையாள அட்டையை ‘e-Locker’ என்ற செயலி மூலம் அணுகலாம்.

 

இது QR குறியீடு மற்றும் முக அங்கீகார வசதிகளைக் கொண்டிருக்கும்.

 

டிஜிட்டல் முறையில் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு அச்சிடப்பட்ட அட்டைகளும் வழங்கப்படும்.

 

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வந்த பிறகும், தற்போதுள்ள பழைய தேசிய அடையாள அட்டைகள் (NIC) அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

 

மக்கள் உடனடியாக மாற்ற வேண்டிய அவசியமில்லை.

 

இதற்கான மென்பொருள் தளம் தயாரானதும், மாகாண சபைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் தரவு சேகரிப்பு பணிகள் தொடங்கும்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button