விளையாட்டு

இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

கொல்கத்தாவில் நடைபெற்ற குறித்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

துடுப்பாட்டத்தில் ரிச்சி பெரிங்டன் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

இதனையடுத்து 153 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

 

துடுப்பாட்டத்தில் டொம் பென்டன் 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button