விளையாட்டு

டி20 உலகக்கிண்ணத் தொடருக்கு பலத்த பாதுகாப்பு – சர்வதேச சமூகத்துக்கு பாதுகாப்பு அமைச்சு உறுதியளிப்பு

இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,

 

இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான முழுமையான பாதுகாப்பு கட்டமைப்பை அமுல்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

 

இந்தப் போட்டியின் சர்வதேச முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெருமளவிலான பார்வையாளர்களை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், முப்படைகள், புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

 

போட்டி நடைபெறும் மைதானங்கள், அணிகல் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், பயிற்சி தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரசிகர் மையங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

24 மணி நேரமும் செயல்படும் வகையில் மைதான சுற்றுவட்ட பாதுகாப்பு, நுழைவு கட்டுப்பாடு, வாகன சோதனை நிலையங்கள் மற்றும் கூட்டம் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் போட்டிகள் நடைபெறும் காலம் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

 

பங்கேற்கும் அணிகள், போட்டி அதிகாரிகள், விஷேட பிரமுகர்கள் மற்றும் இராஜதந்திரிகளின் பாதுகாப்பு விடயங்கள் விசேட பாதுகாப்பு பிரிவுகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

 

CCTV கண்காணிப்பு உட்பட நவீன கண்காணிப்பு முறைகள், நிகழ்நேர களநிலவரம் தொடர்பாக அறியவும் விரைவான பதிலளிப்பு திறனையும் மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

வான்வழி பரப்பு கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசரநிலை பதிலளிப்பு குழுக்கள் மற்றும் அவசர மருத்துவ குழுக்கள், அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

 

மேலும் பொதுமக்கள், குறிப்பாக பார்வையாளர்கள், பாதுகாப்பு தரப்பினருடன் ஒத்துழைத்து, போட்டி மைதானங்களின் வழிகாட்டல்களை பின்பற்பற்றி, ஒழுங்கு விதிமுறைகளை நிலைநிறுத்தவும், சந்தேகத்துக்கிடமான செயல்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்ய சட்ட அமுலாக்க தரப்பினருக்கு உதவுமாறும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button